திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்காதீர்கள்…!”கெஹ்ரையான்”படத்திற்கு எதிராக பொங்கி எழ்ந்த கங்கனா…!

`நானும் இந்த மில்லினியல் தலைமுறையை சேர்ந்தவள்தான். அந்தக் காதல் மற்றும் ரொமான்ஸை என்னால் அடையாளம் காண முடியும். ஆனால், மில்லினியல்/நியூ ஏஜ்/நகர்ப்புற காதல் திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்காதீர்கள், ப்ளீஸ்.” –
கங்கனா

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது இந்தி படமான `கெஹ்ரையான் . இதில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே,
சித்தாந்த் சதுர்வேதி
, தஹரியா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர். ஷாகுன் பத்ரா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிம்புவிற்கு அழைப்பு விடுத்த ரஜினி..கதைல செம ட்விஸ்ட்பா..!

இன்றைய ரிலேஷன்ஷிப்பின் சிக்கலான முடிச்சுகளைப் பேசும் `கெஹ்ரையான்’ திரைப்படம், பல தரப்பிலிருந்தும் பல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இரண்டு ஜோடிகளுக்கு இடையில் பின்னப்பட்ட இந்தக் கதையில், காதல், காமம், துரோகம், தொழில் என்று அனைத்தும் வழிந்தோடுகின்றன. இந்நிலையில், இப்படத்திற்கு கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.

இப்படம் குறித்த தனது சமூக வலைதளப் பதிவில், “நானும் இந்த மில்லினியல் தலைமுறையை சேர்ந்தவள்தான். அந்தக் காதல் மற்றும் ரொமான்ஸை என்னால் அடையாளம் காண முடியும். ஆனால், மில்லினியல்/நியூ ஏஜ்/நகர்ப்புற காதல் திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்காதீர்கள், ப்ளீஸ்.

மோசமான படங்களை மோசமான படங்கள் என்றுதான் கூற முடியும். உடலைக் காட்டி எத்துனை கவர்ச்சியாக எடுத்தாலும், பாலியல் கன்டன்ட் சேர்த்தாலும் அந்த வகையான படங்களை காப்பாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.