பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? – ராகுல் காந்தி கடும் தாக்கு!

பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டு மக்களுக்கு எந்த பயனுமில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர்
சரண்ஜித் சிங் சன்னி
தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர்
சரண்ஜித் சிங் சன்னி
உள்ளிட்டோர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து, 20 ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக செயலாற்றி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கிய கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் என்ற இடத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அக்கட்சி நாடாளுமன்ற தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி
தனது 2 – 3 பில்லியனர்களுக்கு கடின உழைப்பைக் கொடுக்க முயற்சித்ததால், ஒரு வருடமாக, பஞ்சாப் விவசாயிகள் குளிர் காலத்தில் பசியுடன் இருந்தனர். போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரம் இல்லை. மேலும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அவர் இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் இதை எல்லாம் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசு செய்தது.

கடந்த மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தனது ஒவ்வொரு பேச்சிலும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வேன் என்றும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றும் கூறினார். இது யாருக்காவது கிடைத்ததா? ஊழல், வேலை வாய்ப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசவில்லை? பணமதிப்பு நீக்கம் செய்தார்; ஜிஎஸ்டியை விதித்தார். இவை எல்லாம் யாருக்கு பலன்?

உணவுப் பூங்காவில் நீங்கள் எதைப் பயிரிட்டாலும், அது உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது தக்காளி கெட்ச் அப் எதுவாக இருந்தாலும், உங்கள் விளைபொருட்களை, பண்ணைகளில் இருந்து நேரடியாக உணவு பதப்படுத்தும் பிரிவுக்கு மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.