BMW பைக் வாங்கிய வெற்றிமாறன்! விலை இவ்வளவா?

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் விலையுயர்ந்த பைக்கை வாங்கி இருக்கிறார்.  2007-ம் ஆண்டு இவர் தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’ படத்தை இயக்கினார்.  இவரது முதல் திரைப்படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் புகழை பெற்று தந்தது.

மேலும் படிக்க | 9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் புதிய படம்!

இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிமாறன் தனுஷை வைத்து ‘ஆடுகளம்‘ படத்தை இயக்கினார்.  2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளை இப்படத்தின் வாயிலாக வெற்றிமாறன் பெற்றார்.  மேலும் இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.  இதனை தொடர்ந்து திரையுலகில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்பட்டது.

vetrimaran

இவர் படத்தை இயக்குவது மட்டுமல்லாது சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதி வருகிறார்.  2015ம் ஆண்டு இவர் இயக்கிய ‘விசாரணை’ படம் அதிக வரவேற்பை பெற்றது.  இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘கயல்’ ஆனந்தி, ‘ஆடுகளம்’ முருகதாஸ் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இந்த படம் சிறந்த திரைப்படத்துக்கான விருதினை பெற்றுள்ளது.  மூன்றாவது முறையாக வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் 2018-ல் வெளியான ‘வட சென்னை’ படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.  இந்த படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

vetrimaran

இந்நிலையில் இவரை பற்றிய ஒரு ஹாட் நியூஸ் என்னவென்றால் இவர் அதிக விலையுயர்ந்த சுமார் ரூ.17 லட்ச ருபாய் மதிப்புள்ள BMW பைக்கை வாங்கி இருக்கிறார்.  இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  தற்போது இவர் சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார், அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் படிக்க | விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் முக்கிய அப்டேட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.