TNPSC நிரந்தரப் பதிவுடன் ஆதார் இணைப்பு அவசியம்; தேர்வாணையம் அறிவிப்பு

TNPSC announce link aadhaar to OTR is mandatory: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 28-ம் தேதிக்குள், நிரந்தர பதிவுடன் ஆதார் விவரங்களை இணைத்திருக்க வேண்டும் என தேர்வாணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

TNPSC-யில் நிரந்தரப் பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், மீண்டும் ஆதார் இணைப்பை தேர்வர்கள் செய்ய வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து, எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி அல்லது [email protected] /[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை தங்கள் ஆதார் விவரங்களை நிரந்தரப்பதிவுடன் இணைக்காத தேர்வர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.