கொரோனா தொற்று பாதிப்பால் 58 இலட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 58 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில், மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றது.

இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து  உயிரிழப்புக்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

இதற்கமைய, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 இலட்சத்து 43 ஆயிரத்து 766 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 37 இலட்சத்து 56 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 55 இலட்சத்து 5 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர். 

ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 24 இலட்சத்து 7 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.