மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமான வார்டனை சிறைவாசலில் வரவேற்ற திருச்சி எம்எல்ஏ…! மீண்டும் சர்ச்சை…

தஞ்சாவூர்: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் நேற்று வெளியே வந்த வார்டன் சகாயமேரிiய சிறை வாசலுக்கு சென்று திருச்சியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வார்டன் சகாய மேரியை சிறை வாசலில் வரவேற்ற காங். எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

ஏற்கனவே மாணவியின் தற்கொலை வழக்கில், திமுகவினரும், திமுக கூட்டணி கட்சியினரும், காவல்துறையினரும் ஒருதலைப்பட்சமாக பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்ததால், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், திருச்சி காங்கிரஸ்  எம்எல்ஏ  சிறையில் இருந்து வெளியே வந்த தஞ்சை பள்ளி வார்டனை வரவேற்றது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியைச் சேர்ந்த விடுதியில் தங்கி படித்து வந்த அநத மாணவி  கடந்த ஜனவரி 9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக மாணவியின் தற்கொலை தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னை மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு கூறியும், தன்னை கடுமையாக வேலைவாங்கியதால் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக மற்றொரு வீடியோவும் வெளியானது. இந்த  விவகாரத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், முழுமையாக விசாரணை நடத்தப்படாத நிலையில், மாவட்ட எஸ்.பி., மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் இல்லை என்று கூறியதும் விமர்சனங்களை எழுப்பியது. அதனால், உயர்நீதிமன்றம், தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை மறுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கிலும், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வார்டன் சகாய மேரிக்கு நீதிமன்றம் ஜாமின் கொடுத்ததைத் தொடர்ந்து அவர் நேற்று திருச்சி சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்தார். அவரை சிறை வாசலுக்குனு சென்று திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.  குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அதனால் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்ற வலியுறுத்தலே காரணம் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.