ஹேக் செய்யப்பட்ட சன்சாத் சேனலை நிறுத்திய யூடியூப்!

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசின்
சன்சாத்
டிவி நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் சன்சாத்
யூடியூப்
சேனலிலும் இந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சேனல் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் சன்சத் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் சன்சத் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சன்சாத் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ சன்சாத் யூடியூப் பக்கத்தை மர்மநபர்கள் அதிகாலை 1 மணியளவில் ஹேக் செய்து விட்டனர். அந்த பக்கத்தின் பெயரை க்ரிப்டோகரன்சியின் பெயரான Ethereum என்றும் அவர்கள் மாற்றியுள்ளனர். இருப்பினும், சமூக வலைதளக் குழுவினரால் 3.45 மணியளவில் சேனல் மீட்கப்பட்டது.

இந்தியாவில் இணைய பாதுகாப்பு சம்பவங்களுக்கான CERT-ln-க்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை தொடர்ந்து சன்சாத் டிவி-யின் யூடியூப் பக்கத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறைபாடுகளை நிரந்தரமாக நீர்க்க யூடியூப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் சன்சத் டிவியின் யூடியூப் பக்கம் செயல்பாட்டிற்கு வரும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

யூடியூப் தகவல்

அதன் தொடர்ச்சியாக, மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சன்சாத் கணக்கை யூடியூப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. யூடியூபின் நெறிமுறைகளை மீறியதால் இந்த பக்கம் (சன்சாத் டிவி) முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.