இசை அமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்

மும்பை: பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.கடந்த ஆண்டு கொரோனா நோயால் பப்பி லஹரி பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பிறகு குணமடைந்த நிலையில் அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘பப்பிடா’ என்று அன்புடன் அழைக்கப்படும் பப்பி லஹிரி, தங்கத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாக விதவிதமான நகைகள் அணிந்து கொண்டிருப்பார். அதுபோல், எப்போதும் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பார். இது பப்பி லஹிரியின் அடையாளமாக மாறி யது. 1973ல் பாலிவுட்டில் அறிமுக மானார். 1980களில் இந்தி சினிமா படங்களில் டிஸ்கோ நடனத்துக்கான இசையைப் புகுத்தினார். மிதுன் சக்ரவர்த்தி நடித்த டிஸ்கோ டான்சர் படத்தில், ‘ஐ அம் எ டிஸ்கோ டான்சர்’ என்ற பாடல் பப்பி லஹிரி இசையில் பிரபலமானது. தொடர்ந்து கோவிந்தா நடித்த பல படங்களிலும் மேற்கத்திய இசையைப் புகுத்தி கலக்கியவர் பப்பி லஹிரி. அவருடைய மெலடி பாடல்களும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. பின்னணி பாடுவதிலும் அதிக கவனம் செலுத்திய அவர், கடைசியாக பாகி 3 படத்தில் பாடியிருந்தார். தமிழில் அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம், குஜராத்தி மொழி படங் களுக்கும் இசை அமைத்துள்ளார். பப்பி லஹிரியின் நிஜப்பெயர் அலோகேஷ். அவர் பாஜவில் இணைந்து, கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் தோல்வியை தழுவினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.