சிங்கப்பூர் பிரமதருக்கு கண்டனம்| Dinamalar

சிங்கப்பூர்: இந்திய எம்.பி..,க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சிங்கப்பூர் பார்லிமென்ட் கூட்டம் கூடியது. அதில் பேசிய 70 வயதான அந்நாட்டு பிரதமர் லீ சியென் லுாங் , இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த நேரு உருவாக்கிய இந்தியாவில், இன்று கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களில் பாதிக்குமேற்பட்டோர் பாராளுமன்ற எம்.பி.,க்களாக உள்ளனர் என்றார்.

பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ,டில்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வொங்கிற்கு சம்மன் அனுப்பி கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.