தமிழகத்தில் இன்று 1,252 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 285 பேருக்கு பாதிப்பு- 4,768 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,41,783. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,80,049.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 285 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 967 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 265 தனியார் ஆய்வகங்கள் என 334 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23,772.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,24,81,927.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 82,272.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 34,41,783.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,252 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 285.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 4129.

* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 740 பேர். பெண்கள் 512 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,768 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 33,80,049 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,962 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9052 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர்.

இன்று மாநிலம் முழுவதும் 42806 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25857 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 10185​​​​​​​ ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.