மலையாள படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீராம்

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீராம்

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீராம்

2/17/2022 3:09:29 PM

பசங்க படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ஸ்ரீராம். தற்போது அவர் மலையாளப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ப்ளூம் இண்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் ‘எக்ஸிட் ‘ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில்  தனி நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார் . புதுமுக இயக்குநர் ஷாகீன் படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜனவரி 15 ஆம்தேதி தைப்பொங்கல் முதல்  கேரளாவின் குட்டிக்கணம் மலைப்பகுதியிலும்  பாலக்காட்டிலும் தொடர்ந்து இரவு பகலாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் மலையாளம் மட்டுமல்லாது, தமிழிலும் தயாரிக்கிறார்கள். திட்டமிட்ட 45நாள் படப்பிடிப்பில் தற்போது 25 நாட்கள் முடிந்த நிலையில் மீதம் உள்ள நாட்களையும் ஒரே ஷெட்யூலாக  படப்பிடிப்பு நடத்தி முடிக்க முடிவு செய்து இடைவிடாது  தொடர்ந்து படபிடிப்பு நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.