இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8% ஆக இருக்கலாம்.. எஸ்பிஐ ஆய்வறிக்கை..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) 5.8 சதவீதமாக இருக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.4% ஆக வளர்ச்சி கண்டது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையினை எட்டியுள்ளது.

எப்படியிருப்பினும் ஜுலை – செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி விகிதமானது முந்தைய காலாண்டினை விட வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது.

மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி அறிவிப்பினை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய கணிப்பினை காட்டிலும் 2022ம் நிதியாண்டில் ஜிடிபி கணிப்பானது, 9.3% ஆக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தற்போது 8.8% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடாவின் முடிவால் அதிர்ந்து போன விமான நிறுவனங்கள்.. சந்திரசேகரனின் பிரமிக்க வைக்கும் திட்டம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

india’s GDP may grow at 5.8% in December quarter: SBI

india’s GDP may grow at 5.8% in December quarter: SBI/இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8% ஆக இருக்கலாம்.. எஸ்பிஐ ஆய்வறிக்கை..!

Story first published: Friday, February 18, 2022, 20:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.