உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்து உளவுத் துறைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று (18) அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்து 215 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.

2019ஆம் ஆண்டு ஏப்பிரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ,சிறுவர்கள் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.