கனடாவில் தஞ்சம் அடைய தனது வீட்டில் தாக்குதல் நடத்தினாரா சமுதித்த?



இலங்கையின் பிரபல ஊடகவியலாளரான சாமுதித்த சமரவிக்ரமவின் வீடு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட பின்னணியில் குறித்து பல்வேறு கருத்து வெளிவருகின்றன.

கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுவதாக தனது வீட்டை சமுத்தித்த தாக்கியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சமுத்தித்த, தனக்கு சில காலங்களுக்கு முன்னரே அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் தனது குடும்பத்துடன் கனடா செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், விசாரணைக் குழு தேவையான விசாரணைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தான் மற்றும் தனது மனைவியின் கைரேகைகள் மற்றும் கையடக்க தொலைபேசி தரவுகள் விசாரணைக் குழுவிடம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும், இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சமுதித்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.