பிறந்தநாளில் வெளியாகும் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ டைட்டில் லுக்

‘ராம் சரண் 15’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில், நாயகியாக கியாரா அத்வானி நடிக்க தமன் இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

image

இப்படத்திற்கு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். இந்த நிலையில், ’ராம்சரண் 15’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ராம் சரணின் பிறந்தநாளான மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 27-ஆம் தேதி தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ராம் சரண்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.