மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில், மாசி மக தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள  ஏரிகாத்த ராமர் என்கிற கோதண்டராமர் கோயில் மாசி மகம் தெப்ப உற்சவ விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையாட்டி, மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கருணாகர பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார். அதில், மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருணாகரப் பெருமாளை வழிபட்டனர்.விழாவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், தக்கார் முத்து ரத்தினவேலு, கோயில் ஆய்வாளர் ஜீவா, செயல் அலுவலர் மேகவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெருமாள் திருவீதி உலா சிறப்பாக நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.