இந்தியா – ஐக்கிய அரபு நாடு: முதல் வர்த்தக ஒப்பந்தம்.. 100 பில்லியன் டாலர் டார்கெட்..! #FTA

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் மத்தியில் முதல் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மூலம் இந்திய நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வர்த்தகச் சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சிறப்பான வழியை இதன் மூலம் உருவாக்க முடியும்.

ஏர் இந்தியா ஊழியர்கள் சோகம்.. ஏர் ஹோஸ்டஸ்-க்கு புதிய கட்டுப்பாடு விதித்த டாடா..!

 அபுதாபி இளவரசர்

அபுதாபி இளவரசர்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு அடித்தளமிட்டு 50 வது ஆண்டுகளும், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டை கொண்டாடி வரும் நேரத்தில், இரு தலைவர்களும் இருநாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் மூலம் அடித்தளம் அமைக்க உள்ளனர்.

 FTA ஒப்பந்தம்

FTA ஒப்பந்தம்

இன்று கையெழுத்தாகும் FTA ஒப்பந்தம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகத்தை 60 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்த வாய்ப்புள்ளது. இதில் சேவை துறை வர்த்தகம் மட்டும் 15 பில்லியன் டாலர் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நடைமுறைக்கு வரும் CEPA
 

நடைமுறைக்கு வரும் CEPA

மேலும் CEPA நடைமுறையாவதன் மூலம் இரு நாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், இதோடு இரு நாடுகளிலும் பரந்த சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய அளவில் உதவும்.

 80 சதவீத பொருட்கள்

80 சதவீத பொருட்கள்

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம் இந்தியாவில் இருந்து தற்போது ஏற்றுமதி செய்யப்படும் 80 சதவீத பொருட்கள் மீதான வரி முழுமையாகக் குறைக்கப்படும். இது மட்டும் அல்லாமல் அடுத்த 2 வருடத்திற்கு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

 முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நகைகள் மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகத்திற்கு மிகப்பெரிய அளவிலான வாய்ப்பு உருவாகும். அதைத் தாண்டி டெக்ஸ்டைல், விவசாயப் பொருட்கள், கெமிக்கல், பார்மா பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும்.

 3வது பெரிய நாடு

3வது பெரிய நாடு

ஐக்கிய அரபு அமீரகம் தற்போது இந்தியாவின் மூன்றாவது 3வது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக உள்ளது, 2021ஆம் ஆண்டில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 43.3 பில்லியன் டாலராக உள்ளது. இதை 100 பில்லியன் டாலர் வரையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

 100 ஆண்டு வர்த்தகம்

100 ஆண்டு வர்த்தகம்

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் மத்தியில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான வர்த்தக வரலாறு உள்ளது. கச்சா எண்ணெய் வளம் கண்டுப்பிடிக்கப்பட்ட 1962 க்கு முன்பு பேரிச்சை, முத்து மற்றும் மீன் வர்த்தகம் செய்யப்பட்டது, ஆனால் அதற்குப் பின்பு கச்சா எண்ணெய் முக்கிய வர்த்தகப் பொருளாக மாறியுள்ளது

 முக்கிய ஏற்றுமதி

முக்கிய ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தங்கம், வைரம், ரத்தினங்கள் மற்றும் நகைகள், தாதுக்கள், தானியங்கள், சர்க்கரை, பழங்கள் மற்றும் காய்கறிகள், தேநீர், இறைச்சி மற்றும் கடல் உணவுகள், ஜவுளி, பொறியியல் மற்றும் இயந்திர பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் போன்றவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.

 முதலீடுகள்

முதலீடுகள்

2020-21 நிதியாண்டில் மட்டும் UAE சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் வாயிலாக இந்தியாவில் $4.12 பில்லியன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் UAE இன் முதலீடுகள் முக்கியமாக ஐந்து துறைகளில் குவிந்துள்ளன: சேவை துறை, கடல் போக்குவரத்து, மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான மேம்பாடு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India-UAE first ever bilateral free trade agreement: Everything need to know

India-UAE first ever bilateral free trade agreement: Everything need to know இந்தியா – ஐக்கிய அரபு நாடு: முதல் வர்த்தக ஒப்பந்தம்.. 100 பில்லியன் டாலக் டார்கெட்..! #FTA

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.