`கண்ணே கலைமானே' 40ஆவது ஆண்டு காணும் மூன்றாம் பிறை; சிறப்பு போட்டோ ஆல்பம்!

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி 1982 இல் வெளியாகியது ‘மூன்றாம் பிறை ‘. இத்திரைப்படம் வெளியாகி, 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் அதற்கு ஈடாக கமஹாசனும் தங்களுடைய உச்ச நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இசை இளையராஜா. 5 பாடல்கள் இந்தப் படத்தில். பலரின் நினைவுகளில் நீங்காது நிற்கும் ‘கண்ணே கலைமானே’ பாடல் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல்.

இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த கிளைமாக்ஸ்களைக் கணக்கெடுத்தால் அதில் ‘மூன்றாம் பிறை’ படத்துக்கு மிக நிச்சயமாக ஒரு இடமுண்டு.

படத்தில் சில்க் ஸ்மிதாவிற்கும் ஒரு பாத்திரம் உண்டு. கமலை ஏக்கத்தோடு பார்க்கும் கதாபத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருப்பார்.

இத்திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை தன்வசப்படுத்தியது. சிறந்த நடிக்கருக்கான தேசிய விருது கமல் ஹாசனுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பாலு மகேந்திராவிற்கும் வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்றத்திற்காக அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சி தலைவர் எம்.ஜி ராமச்சந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஸ்ரீதேவிக்கு இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அவரின் ரசிகர்களால் ஏமாற்றத்தோடு பார்க்கப்பட்டது.

ஒரு காட்சியைப் பார்த்தால் சொல்லிவிடமுடியும், அது பாலு மகேந்திராவால் எடுக்கப்பட்டது என்று. முத்திரைக் காட்சிகளால் நிறைந்தது மூன்றாம் பிறை படம்.

“தம்பி, கமல் ஹாசன் உண்மையாகவே சகலகலா வல்லவன் தான்” என்று பாராட்டுவிழாவில் எம்.ஜி.ஆர் பேசினார்.

“நான் இசையமைக்கும் பாடல்களை எனக்கு திருப்தியாக தோன்றும் வகையில் படமாக்குபவர்கள் இருவர்தான். ஒருவர் பாலுமகேந்திரா.. இன்னொருவர் மணிரத்னம்” என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் இளையராஜா.

நடிப்பு, கதை, இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம் என எல்லா தளங்களிலும் மிகச் சிறந்த பங்களிப்போடு வெளிவந்த மூன்றாம் பிறை நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.