அஞ்சலக திட்டங்களை SBI-ன் ஆன்லைனில் எப்படி தொடங்கிக் கொள்வது.. என்னென்ன தேவை..!

அஞ்சலக திட்டங்கள் என்றாலே அதில் வருமானம் ஓரளவுக்கு கிடைத்தாலும், முதலீட்டுக்கு பங்கமில்லை. சந்தை அபாயமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நிரந்த வருமானம் கொடுக்கும் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.

அஞ்சலக திட்டங்களிலும் சிறந்த திட்டமாக பொது வருங்கால வைப்பு திட்டமும், பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி திட்டமும் பார்க்கப்படுகிறது.

இதில் பொது வருங்கால வைப்பு திட்டத்திற்கு வட்டி விகிதமாக 7.1%மும், சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு 7.63%மும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ரொம்ப ஈஸி

இந்த திட்டங்களை முன்னதாக அஞ்சலகங்களில் மட்டுமே தொடங்கிக் கொள்ளலம் என்ற ஆப்சன் இருந்து வந்தது. ஆனால் பிறகு வங்கிகளிலும் தொடங்கிக் கொள்ளலாம் என்ற ஆப்சனும் வந்தது. இதனால் கிராமப்புறப் பகுதிகளில் மட்டும் அல்லாது நகரப்பகுதிகளிலும், எளிதில் இந்த திட்டங்களில் இணையக் கூடும். அதோடு வங்கிகள் எனும் அனைத்து சேவைகளையும் ஒரே கணக்கில் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

 எப்படி எஸ்பிஐ-ல் தொடங்குவது?

எப்படி எஸ்பிஐ-ல் தொடங்குவது?

எஸ்பிஐ-யின் https://www.onlinesbi.com/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் Request என்ற ஆப்சனில் சென்று New PPF Account என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்,

அதன்பிறகு Apply for PPF என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் உங்கள் வங்கிக் கிளையின் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடுங்கள்.

அதன் பிறகு நாமினி விவரங்களையும் பதிவிட்டு, அதன் பிறகு சப்மிட் கொடுங்கள். நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியாக கொடுத்துள்ளீர்களா? என ஒரு முறை பர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சரியாக சமர்பித்து இருந்தால் அப்ளிகேஷன் நம்பர் வரும்.

அதன் பிறகு உங்களது பிபிஎஃப் ஆன்லைன் அப்ளிகேஷனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எனினும் நீங்கள் கணக்கினை தொடங்கிய 30 நாட்களுக்குள் KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இதனுடன் போட்டோ ஒன்றையும் கொடுக்க வேண்டும்.

 சுகன்யா சம்ரிதி யோஜனா
 

சுகன்யா சம்ரிதி யோஜனா

சுகன்யா சம்ரிதி யோஜனா அரசின் கீழ் செயல்படும் அஞ்சலகத்தின் பாதுகாப்பான திட்டமாகும்.

இந்த திட்டத்தினை அஞ்சலகம் மற்றும் வங்கிகளிலும் தொடங்கிக் கொள்ளலாம்.

இதற்கும் எஸ்பிஐ-யின் https://www.onlinesbi.com/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் Request என்ற ஆப்சனில் சென்று SSY என்ற ஆப்சனிற்கு செல்லவும்.

பார்மினை பதிவு செய்த பிறகு, சரியான ஆவணங்களுடன் இணைத்து போட்டோவும் சேர்த்து கொடுக்கவும்.

இதற்காக குறைந்தபட்சம் 1,000 ரூபாயினை டெபாசிட்டினை செய்யவும்.

நீங்கள் கணக்கினை தொடங்கிய பிறகு நீங்கள் செய்யவிருக்கும் டெபாசிட்டினை செக் ஆகவோ அல்லது கேஸ் அல்லது டிடி- ஆகவோ கொடுக்கலாம்.

 இதெல்லாம் அவசியம்

இதெல்லாம் அவசியம்

இதற்காக உங்களுக்கு எஸ்பிஐ-யில் சேமிப்பு கணக்கு வேண்டும். ஆன்லைனில் தொடங்க ஆன்லைன் வங்கி சேவை அல்லது மொபைல் வங்கி சேவை ஆப்சன் இருக்க வேண்டும். மேலும் ஆதார் நம்பர் உங்களது வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். இதற்காக உங்களுக்கு இ- கையெப்பம் வேண்டும். தேவையான ஆவணங்கள் சரியாக இருப்பின் உங்களது கணக்கு உடனடியாக தொடங்கிக் கொள்ள முடியும்.

 ஈஸியான ஆப்சன்

ஈஸியான ஆப்சன்

இந்த கணக்கினை தொடங்க நேரம் காலம் என்பது அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானலும் தொடங்கிக் கொள்ளலாம். ஆக இது மிக எளிதான ஓரு ஆப்சன். ஈஸியான திட்டம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to open PPF and SSY accounts with SBI?check details here

How to open PPF and SSY accounts with SBI?check details here/அஞ்சலக திட்டங்களை எப்படி SBI-ன் ஆன்லைனில் எப்படி தொடங்கிக் கொள்வது.. என்னென்ன தேவை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.