டோஜ்காயினை பேமெண்டாக ஏற்றுக் கொண்ட டெஸ்லா.. குஷியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், அதன் சூப்பர் சார்ஜிங் ஸ்டேஷனில் கட்டணமாக விரைவில் ஏற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இது குறித்து டெஸ்லா அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவித்துள்ளது.

டெஸ்லாவின் சாண்டா மோனிகாவில் உள்ள சூப்பர் சார்ஜிங் நிலையத்தில் விரைவில், டோஜ்காயின் முலம் கட்டணம் செலுத்தலாம்.

10 நிமிடங்களில் ஃபுல்

இந்த சூப்பர் சார்ஜிங் நிலையத்தில் விரைவில் டிரைவ் இன் தியேட்டர்கள், உணவகம் கொண்டு வர உள்ளதாகவும் டெஸ்லாவின் சிஇஒ அறிவித்துள்ளார். இதே டெஸ்லாவின் கன்சோலின் நிறுவனரான ராயன் சோஹூரி, புதியதாக திறந்துள்ள டெஸ்லா காரின் சூப்பர் சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்ட 10 நிமிடங்களிலேயே நிரம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிட்காயினுக்கு பிறகு டோஜ்காயின்

பிட்காயினுக்கு பிறகு டோஜ்காயின்

முன்னதாக பிட்காயினுக்கு ஆதரவளிக்கும் விதமாக கட்டணமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று செய்திகள் வெளியானது. ஒரு கட்டத்தில் டெஸ்லா வாகனங்களுக்கு கிரிப்டோகரன்சிகளை கட்டணமாக செலுத்திக் கொள்ள ஆப்சனாக கொண்டு வரலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது டோஜ் காயினை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் சற்று அதிகரித்து காணப்பட்ட டோஜ்காயின், தொடர்ச்சியாக இது சரிவினையே கண்டு வருகின்றது.

டோஜ்காயின்  நிலவரம்
 

டோஜ்காயின் நிலவரம்

தற்போது டோஜ்காயின் 3.15% குறைந்து, 0.137093 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்சம் , குறைந்தபட்சம் விலை 0.14 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 19.45% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 0.740796 டாலராகும்.

எத்தேரியம் & டோஜ்காயின்

எத்தேரியம் & டோஜ்காயின்

சமீப காலமாக எலான் மஸ்க் டோஜ் காயினுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், எலான் மஸ்கிடம் சிறிய அளவிலான எத்தேரியம் மற்றும் டோஜ்காயினை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது கிரிப்டோகரன்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக இருந்தாலும், அது சந்தையில் பெரியளவில் கைகொடுக்கவில்லை எனலாம் .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla plans accept dogecoin as payment at supercharging station

Tesla plans accept dogecoin as payment at supercharging station/டோஜ்காயினை பேமெண்டாக ஏற்றுக் கொண்ட டெஸ்லா.. குஷியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள்..!

Story first published: Sunday, February 20, 2022, 20:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.