முதலமைச்சர் மம்தா -ஆளுநர் இடையே மீண்டும் வெடித்த மோதல்.! <!– முதலமைச்சர் மம்தா -ஆளுநர் இடையே மீண்டும் வெடித்த மோதல்.! –>

மேற்கு வங்காள சட்டசபையை கூட்டக் கோரும் முதலமைச்சர் மம்தாவின் பரிந்துரையை மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் திருப்பி அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது டுவிட்டர் பதிவில், ’மார்ச் 7-ந் தேதி சட்டசபையை கூட்டுமாறு அனுப்பிய பரிந்துரை, அரசியலமைப்பு சட்டத்தின்படியான இணக்கத்துக்காக திருப்பி அனுப்ப வேண்டியதாயிற்று என விளக்கம் அளித்துள்ளார்.

ஏனென்றால் அரசியலமைப்பு விதி 166(3)-ன்கீழ், அலுவல் விதிகளுக்கு இணங்க அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில்தான் ஆளுநர் சட்டசபையை கூட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மம்தாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அரசியல் சாசன அமைப்பின் இணக்கத்துக்காக கோப்பு திருப்பி அனுப்பப்படுகிறது என கூறி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.