சாயா சிங் நடிப்பில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’

நடிகை சாயா சிங் நடிப்பில் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ இன்று முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

‘பூவே உனக்காக’ சீரியலில் நடித்துவரும் நடிகை சாயா சிங் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நெடுந்தொடரில் நடித்து வருகிறார். பிரபல நடிகர்களோடு இணைந்து நடிகை சாயா சிங், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த புதிய நெடுந்தொடரை சிறப்பு பார்ட்னராக பிரித்வி இன்னர் வேர்ஸ் மற்றும் பவர்டு பை அரோமா அக்மார்க் நெய், இனைந்து வழங்குகின்றனர். தீவிரமான உணர்வுகள் மற்றும் அதிரடி திருப்பங்கள் கொண்ட கதையின் வழியாக உடன் பிறந்த சகோதரிகளின் பாசப்பிணைப்பை இப்புதுயுகத்தில் புதிய பரிமாணத்தில் வழங்குகிறது இந்த நெடுந்தொடர்.

மதுரை மாநகரைப் பின்புலமாக கொண்டிருக்கும் கதையான ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ ஒவ்வொருவரும் தனித்துவமான பண்பியல்புகளை கொண்டிருக்கும் நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. பெற்றோர்களை இளம் வயதிலேயே பறிகொடுத்த பிறகு குடும்ப பொறுப்புகள் தலை மீது விழுகிற இந்திராணி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதையில் அன்பு, பாசம் மற்றும் அதிரடி திருப்பங்கள், எதிர்பாரா நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்று விறுவிறுப்பாக நகரும்படி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்திராணியாக சாயா சிங் நடிக்கிறார். தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிக்கவும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக பேணி வளர்க்கவும் உறுதிமொழி ஏற்கும் இந்திராணி, ஒரு அப்பாவி என்ற இளம் பெண் நிலையிலிருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய மன உறுதிவாய்ந்த பெண்ணாக புதிய அவதாரம் எடுக்கிறார் எடுப்பதே கதை. சுனிதா, சங்கவி, ஐரா அகர்வால் உள்ளிட்டோர் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தீபக் குமார் முதன்மை ஆண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சகோதரிகளுக்கிடையே ஏற்படும் குடும்ப அளவிலான போட்டியின் நுட்பங்களையும் இந்நெடுந்தொடர் ஆராய்கிறது.

இந்நெடுந்தொடரின் இயக்குநர் ராஜா தனுஷ் பேசுகையில், “இந்த சீரியலுக்கான கதையானது கதாபாத்திர வடிவமைப்பு அம்சத்தில் உண்மையிலேயே மிகவும் வலுவானதாக இருக்கிறது. கதாபாத்திரங்களோடு மனதளவில் ஒருமிக்க வைக்கும் திரைக்கதையின் ஒவ்வொரு எபிசோடும், பார்வையாளர்களை கட்டிப்போடக்கூடியதாக இருக்கும். படப்பிடிப்பின் போதான அனுபவம் மிக அற்புதமானதாக இருந்தது.  கதாபாத்திரங்களது கண்ணோட்டத்தின் வழியாக நாங்கள் சொல்லும் இந்த கதை சித்தரிப்பை பார்வையாளர்கள் அனைவரும் நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.

image

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை சாயா சிங், “குடும்பத்தில் வழக்கமாக ஆண்கள் தான் குடும்பத் தலைவர்களாக இருக்கின்றனர். நம்ம மதுரை சிஸ்டர்ஸ் கதையில் எனது கதாபாத்திரம், குடும்பங்களை ஒருங்கிணைப்பதிலும் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுவதிலும் ஆண்களுக்கு நிகரான திறன் கொண்டவர்களாகவே பெண்கள் இருக்கின்றனர் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்ல முற்படுகிறது. பெண்களின் வேறுபட்ட பரிமாணத்தை இது நேர்த்தியாக எனது பிற கதாபாத்திரங்களிலிருந்து நம்ம மதுரை சிஸ்டர்ஸ்-ல் எனது கதாபாத்திரம் மிகவும் வேறுபட்டு தனித்துவமானதாக திகழ்கிறது,” என்று குறிப்பிட்டார்.

image

சரிவிலிருந்து மீண்டெழும் திறனையும், மன உறுதியையும் நேர்த்தியாக சித்தரிக்கும் ’நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ பிப்ரவரி 21 இன்று முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.