தனியார் நிதி நிறுவனத்தின் மீது ரூ.200 கோடி மோசடி புகார் : உரிமையாளர் தலைமறைவு

துரை

ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ராஜா மற்றும் அவர் சகோதரர் ரமேஷ் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளதக சொல்லப்படுகிறது.  இதையொட்டி ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் அதிகமான இடங்களில் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்    இதையொட்டி அவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ரக்கிளையில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.  இதையொட்டி சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்தபணத்தை மீட்டுத் தரக் கோரியும் மோசடி செய்தோருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கோரி மதுரை ஒத்தக்கடையில் இருந்து உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.

இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.  எனவே போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  காவல்துறையினர் அவர்களை தடுத்துள்ளனர்.  இதையொட்டி அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.  காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளனர்.  இது அந்த பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.