திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Thiruvarur Central University of Tamilnadu recruitment 2022 apply soon: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர், உதவி பதிவாளர், பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 05 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relations Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவி பதிவாளர் (Assistant Registrar)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரிவு அலுவலர் (Section Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 2, 2ஏ; தேர்வு நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வு; முக்கிய தகவல்கள்

தனி உதவியாளர் (Personal Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு; ஓபிசி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ், எஸ்டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : “The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.03.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2022/02/NT_ADVT-NON_Teaching_18022022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.