மெட்டா நிர்வாகி செய்த காரியம் – உடனடியாக வேலையை விட்டு தூக்கிய மார்க்!

Facebook-இன் தாய் நிறுவனமான மெட்டா உலகளாவிய சமூக மேம்பாட்டுத் துறையின் மேலாளரை பணிநீக்கம் செய்துள்ளது. தன்னை விட வயது குறைந்த 13 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக சாட் செய்தது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

யூடியூப், ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆன பிறகு, ஜெரன் ஏ மைல்ஸ் பணியைத் தொடர மெட்டா நிறுவனம் அனுமதிக்கவில்லை என நிறுவனம் டெக் கிரஞ்ச் தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. சிறுவர்களை குறி வைத்து பாலியல் குற்றங்களை நிகழ்த்தும் நபர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் இடமில்லை என மெட்டா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற நபர்களை கண்டறிய தனிக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மெட்டா கூறியுள்ளது.

Read More:
பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

“இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை மிகைப்படுத்த முடியாது. அந்த நபரை பணியில் இருந்து நிறுவனம் நீக்கிவிட்டது. இந்த சூழ்நிலையை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இது குறித்து கூடுதல் தகவல் இப்போது கூற முடியாது,” என்று மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் வீழ்ச்சி

டிக்டாக், யூடியூப் தளங்களின் ஆதிக்கம் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் நிறுவனம் செய்துள்ள தனிநபர் பாதுகாப்பு கொள்கை மாற்றங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, வருவாய் பாதிக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது.அந்த வகையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து மெட்டா பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். செப்டம்பர் 2021 நிலவரப்படி, 1.3 டிரில்லியன் டாலர் என உச்ச நிலையில் இருந்து மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலரை இழந்துள்ளது.

Read More
:
Free Fire விளையாட்டுக்கு தடை – சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

வெளியேறிய பயனர்கள்

சமீபத்தில் பேஸ்புக்கிற்கு வரும் தினசரி பயனர்களின் வருகை முதல்முறையாக குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் வருகை நாளொன்றுக்கு 1.930 பில்லியனாக இருந்த நிலையில், தற்போதைய காலாண்டில் அது 1.929 பில்லியனாக சரிந்துள்ளது.

பேஸ்புக் தளம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை கண்டிராத வீழ்ச்சியை நிறுவனம் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் வரலாற்றில் முதன் முறையாக 20% விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளது.

Also read: Metaverse’ல் நிலம் வாங்கி தியேட்டர் கட்டிய தயாரிப்பாளர்!பிரபலங்களுடன் டேட்டிங் செய்ய ஒரு ஸ்பெஷல் ஆப்?Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.