கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு- கேரளாவில் நாளை முதல் வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி

திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 69 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபோல கேரளாவில் உள்ள வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதனை கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான பொன்முடி, கல்லார், மீன்முட்டி, மங்காயம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மீன்சுருட்டி நீர்வீழ்ச்சிகள்
நாளை முதல் இந்த சுற்றுலா தலங்கள் திறக்கப்படும். பொதுமக்கள் கொரோனா விதிகளை மீறாமல் இங்கு சென்று வரலாம், எனக்கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.