ஒரு வருடம் செல்லுபடியாகும் Jio Recharge திட்டங்கள்! ஓடிடி சந்தா இலவசம்!

டெலிகாம் நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்ததன் விளைவாக, ரீசாஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதுபுது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம் நிறுவனம் திட்டங்களை வகுத்து வருகிறது.

அந்த வகையில், ஒரு ஆண்டு செல்லுபடியாகும் 5 ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற இணைய சேவை, ஜியோ சேவைகளின் இலவச அணுகல்கள், இலவச ஓடிடி சந்தா ஆகியன பயனர்களுக்கு கிடைக்கிறது. இதில் உங்களுக்கான சிறந்த திட்டத்தைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

ஜியோ ரூ.2,545 ரீசார்ஜ் திட்டம் (jio 2545 plan details)

இந்த திட்டம் 336 நாள்களுக்கு செல்லுபடியாகும். மொத்தம் இந்த திட்டத்தில் 504ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 1.5ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி (Jio Security), ஜியொ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகல் கிடைக்கும்.

Airtel வாடிக்கையாளர்கள் விரும்பும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்!

ஜியோ ரூ.2,879 ரீசார்ஜ் திட்டம் (jio 2879 plan details)

இந்த திட்டம் 365 நாள்களுக்கு செல்லுபடியாகும். மொத்தம் இந்த திட்டத்தில் 730ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி (Jio Security), ஜியொ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகல் கிடைக்கும்.

ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம் (jio 2999 plan details)

இந்த திட்டம் 365 நாள்களுக்கு செல்லுபடியாகும். மொத்தம் இந்த திட்டத்தில் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2.5ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகல் கிடைக்கும்.

Jio ரீசார்ஜ்: அளவில்லா 3ஜிபி டேட்டா திட்டங்கள்… அள்ளித்தரும் ஜியோ!

ஜியோ ரூ.3,199 ரீசார்ஜ் திட்டம் (jio 3199 plan details)

இதுவும் ஒரு வருட ரீசார்ஜ் திட்டமாகும். இத்திட்டம் 365 நாள்களுக்கு செல்லுபடியாகும். மொத்தம் இந்த திட்டத்தில் 740ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இந்த திட்டத்தில் கூடுதலாக 10ஜிபி டேட்டா பேக்கப் வழங்கப்படுகிறது. இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் அணுகலும் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த திட்டத்துடனும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு வருட சந்தாவும் இலவசமாகக் கிடைக்கிறது.

JioBook Laptop: லேப்டாப் பிராண்டுகள் ஷாக்… சந்தையில் கால்பதிக்கும் ஜியோ!

ஜியோ ரூ.4,199 ரீசார்ஜ் திட்டம் (jio 4199 plan details)

இது ஒரு வருட ரீசார்ஜ் திட்டமாகும். இத்திட்டம் 365 நாள்களுக்கு செல்லுபடியாகும். மொத்தம் இந்த திட்டத்தில் 1095ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 3ஜிபி என்ற வரம்பை தாண்டி பயன்படுத்தும்போது, இணையத்தின் வேகம் 64kpbs ஆக குறையும். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் அணுகலும் பயனர்களுக்குக் கிடைக்கிறது. கூடுதலாக Disney+ Hotstar ஒரு வருட சந்தாவும் இலவசமாகக் கிடைக்கிறது.

Jio Phone 5g: மிகக் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்… ஜியோவின் கனவு நனவாகுமா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.