உக்ரைன் எல்லை நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறார்களா இந்திய அமைச்சர்கள்? யார்…யார்?

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்கள் அங்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் வெலியான தகவலில், மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கு சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்கும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பர் என்றும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சுமார் 15,000 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.
image
உக்ரைன் நாட்டு எல்லையில் உள்ள முகாம்களில் மட்டும் சுமார் 1,000 மாணவர்கள் உள்ளனர். உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் செல்வதில் சிக்கல் உள்ள நிலையில் அமைச்சர்கள் நேரடியாக செல்கின்றனர். பிரதமர் மோடி தலைமையில் இதுகுறித்து விவாதிக்கவும் விரிவாக பேசவும் சிறப்பு குழு கொண்ட உயர்மட்ட குழு கூட்டம் விரைவில் நடக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Union Ministers Hardeep Singh Puri, Jyotiraditya Scindia, Kiren Rijiju and Gen (Retd) VK Singh to travel to neighbouring countries of Ukraine to coordinate the evacuation mission and help students: Govt sources#RussiaUkraineCrisis pic.twitter.com/DbaQ6U47KQ
— ANI (@ANI) February 28, 2022

சமீபத்திய செய்தி: “எங்களை மோசமாக நடத்தினார்கள்”- உக்ரைன் ராணுவம் மீது இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.