Google Play Pass அறிமுகம் – 1000க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்கள் இலவசம்!

பெரும்பாலான மக்கள் நிராகரிக்க முடியாத இடத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. பல மேம்பட்ட சேவைகள் மூலம் பயனர்களை மகிழ்வூட்டும் கூகுள், தற்போது Google Play Pass எனும் புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தங்களுக்குத் தேவையான செயலிகள் மற்றும் கேம்களை Google Play Store அல்லது கூகுள் ப்ளே பயன்பாடு மூலம் பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த நிலையில், கூகுள் இந்தியா அறிவித்திருக்கும், புதிய சந்தா திட்டம் பயனர்களுக்கு பெரும் வசதியாகப் பார்க்கப்படுகிறது.

டெக் சந்தையில் சமீபகாலமாக, சந்தா திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதாவது குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தி விட்டு, அந்த பயன்பாட்டில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும் என்பதால், பயனர்களின் ஆர்வம் சந்தா திட்டங்களின் மீது திரும்பியது. இதனை சரியாக புரிந்துகொண்ட கூகுள் நிறுவனம், தற்போது இந்த புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் ப்ளே பாஸ் அறிமுகம்

இதில் இணையும் பயனர்களுக்கு ஒரு மாத Trail இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தா திட்டத்தில் சேரும் பயனர்களுக்கு 1000க்கும் மேற்பட்ட செயலிகள், கேம்கள் ஆகியவற்றின் அணுகல்கள் இலவசமாக வழங்கப்படும். ஆம், விளம்பரங்கள் இல்லாத அனுபவத்தைப் பயனர்கள் இதன்மூலம் பெற முடியும்.

பணத்தை அள்ளித்தரும் பேஸ்புக்: TikTok-ஐ ஓரங்கட்டி பயனர்களை ஈர்த்த Meta நிறுவனம்!

அதுமட்டுமில்லாமல், பயனர்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் In-App Purchases இந்த சந்தா திட்டத்தில் இடம்பெறாது. இதில் கிடைக்கும் பிரீமியம் பயன்பாடுகளை எந்த வித கட்டணங்களும் இன்றி பயனர்கள் அனுபவிக்கலாம் என கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.

ஒரே இடத்தில் பயனர்களுக்கு தேவையான அனைத்து பயன்பாடுகளும் கிடைக்கும் வண்ணம் கூகுள் ப்ளே சேவை 2012ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. பயனாளர்களின் பேராதரவைத் தொடர்ந்து, இந்த சலுகை சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூகுள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் 59 நாடுகளைச் சேர்ந்த டெவலப்பர்களின் பயன்பாடுகளை இந்த திட்டத்தின் மூலம் அணுக முடியும், பெரும்பாலான இந்திய டெவலப்பர்களின் பயன்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது. மொத்தம் 90 நாடுகளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளே பாஸ் சந்தா விலை

இந்த சந்தா திட்டத்தின் விலை தான் பயனர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும். ஒரு மாத சந்தா ரூ.99ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு மாத இலவச டிரையலும் கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கு ரூ.889 என்று சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ப்ரீபெய்டு திட்டமாக ரூ.109 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குச் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் இணைந்தால், 5 குடும்ப உறுப்பினர்கள் வரை Play Pass-ஐ பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து பேசிய கூகுள் இந்தியா Play Partnerships-இன் நிர்வாக இயக்குநர், “Google Play பயனர்களின் செயல்பாடுகளை நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். அவர்களுக்கு தேவையான படைப்புகளை உள்ளூர் டெவலப்பர்கள் மூலம் பெற முயற்சி செய்கிறோம். அனைத்தையும் அவர்களுக்கு எளிமையாக்கச் செயல்பட்டு வருகிறோம்.

யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி… இத மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க!

அதன் முயற்சியாகத் தான் சந்தா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் இணைந்து தங்களுக்கு பிடித்தமான பயன்பாடுகளை இலவசமாக அணுக முடியும். எந்த வித விளம்பர தொல்லைகளும் இருக்காது. மேலும், தேவையில்லாமல் கட்டணங்கள் செலுத்த வேண்டியதும் இல்லை. இந்த சேவை பயனர்களுக்கு அளப்பரிய வசதிகளைத் தரும் என்ற நம்பிக்கை கூகுள் நிறுவனத்திற்கு உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.