எதிரிகளை துவம்சம் செய்ய உக்ரைன் அரசு அதிரடி அறிவிப்பு!

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்த ரஷியா, இந்த விஷயத்தில் தம்மை துளியும் மதிக்காமல் செயல்படுவதாக, உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக உக்கிர தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுமழை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதல் நடத்திவரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை சின்னாபின்னம் ஆக்கி வருகின்றன.

உக்ரைன் -ரஷியா இடையேயான போர எங்கே உலகப் போருக்கு கொண்டு போய் விட்டுவிடுமோ என்று அச்சத்தில் உள்ள உலக நாடுகள், இருநாட்டுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தின. அதன்படி பெலாரஸில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையை முன்னிருந்து நடத்திய பெலாரஸ் நாடே ரஷியாவுக்குஆதரவாக கோதாவில் இறங்கியுள்ளது. அந்நாட்டு படைகள் உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னிஹிவ் பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

‘எங்கள ஒன்னும் பண்ண முடியாது!’ – கெத்து காட்டும் உக்ரைன் அதிபர்!

இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் அரசு, தமது குடிமக்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியி்ட்டுள்ளது. அதில், செர்னிஹிவ் பகுதிகளுக்குள் நுழைந்துள்ள எதிரிகளை கொன்றால், ஒரு நபருக்கு தலா 300 டாலர் சன்மானம் வழங்கப்படும் என்றும், எதிரிகளின் ராணுவ டாங்கிகளை அவர்களிடமிருந்து கைப்பற்றி கொண்டு வருபவர்களுக்கு 2,50,000 உக்ரைன் பணம் பரிசாக அளிக்கப்படும்’ எனவும்
உக்ரைன் அரசு
தெரிவித்துள்ளது.

முன்னதாக, போர் தொடங்கிய இரண்டாவது நாளில், உக்ரைன் படைகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் போர் நிறுத்தம் செய்ய தயார் என்ற ரஷியா கூறியதை ஏற்காமல் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.