தெற்கு ரயில்வே ரயில்கள்: திடீர் சோதனையின்போது கோடிகளில் வசூலான அபராதத்தொகை

மதுரை கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ. 7.79 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையின்போது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இதில், மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரகசியமாக திடீரென பயணச்சீட்டு பரிசோதனை நடத்துகையில், கடந்த  2021 ஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி 27-ம் தேதி வரை மதுரை கோட்டத்தில் 1.37 கோடி பயணிகள் பிடிபட்டு, அவர்களிடமிருந்து அபராதமாக ரூ 7.79 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
image
இதே காலத்தில் தெற்கு ரயில்வே அளவில், பயணச்சீட்டு இல்லாதவர்களிடம் அபராதமாக ரூ 83.99 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 22.9 சதவீதம் அதிகமாகும். இதேபோல சென்னை கோட்டத்தில் 6.33 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூபாய் 29.86 கோடியும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3.10 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூ 16.53 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் 2.70 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூ 14.15 கோடியும், சேலம் கோட்டத்தில் 1.69 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூபாய் 9.61 கோடியும், திருச்சி கோட்டத்தில் 1.12 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூ. 6.02 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த பிப்ரவரி மாதம் மட்டும் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் தெற்கு ரயில்வே அளவில் அபராதமாக ரூபாய் 9.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 32.8 சதவீதம் அதிகமாகும். மேலும் பிப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரே நாளில் அதிகபடியாக பயணச்சீட்டு இல்லாத 8,425 பேர் பிடிபட்டு ரூபாய் 43.35 லட்சம் அபராதம் செலுத்தியுள்ளனர்.
image
இந்தத்தகவல்களை வெளியிட்டதுடன், பயணிகள் ரயிலில் உரிய பயணச் சீட்டு மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்வதோடு அனுமதிக்கப்பட்ட அளவில் உடைமைகளை எடுத்துச் செல்லுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய செய்தி: `எப்படியாவது உடனே வெளியேறுங்கள்’-உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.