பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் அஜித் டான்ஸ் இருக்கிறதா? விமர்சன சர்ச்சை

Blue sattai Maran comment about Ajith dance in Valimai goes controversy: வலிமை படத்தில் அஜித்தின் நடனம் குறித்த தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் சர்ச்சையாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். பாலிவுட் நடிகை ஹூமா குரேசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் டோலிவுட் நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24 அன்று வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் எந்த குறைவும் இல்லாமல் சாதனை படைத்து வருகிறது. அதாவது வெளியான 3 நாட்களில் வலிமை திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வலிமை படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தை மோசமாக விமர்சனம் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். இதற்கு அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் நாங்க வேற மாதிரி பாடலுக்கு நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்டு பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார்? பதிவிட்டுள்ளார்.

மாறனின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அருண் விஜய் பட அப்டேட்.. விக்ரம் ரசிகருக்கு பதில் அளித்த இயக்குநர்.. மேலும் சினிமா செய்திகள்

குறிப்பாக நடிகை கீர்த்தி பாண்டியன், ஒரு நடிகரின் உடலைச் சார்ந்த இந்த கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. படத்தைப் பற்றிய உங்கள் கருத்தையும் பார்வையையும் தெரிவிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது, ஆனால் பாடி ஷேமிங் மற்றும் “வேடிக்கை” கவனத்திற்காக இதுபோன்ற தரம் குறைந்த அறிக்கைகள் அல்லது கேள்விகளை எழுப்புவது அருவருப்பானது. என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல தயாரிப்பாளரான ஃபோப்டா தனஞ்செழியன் அவர்கள் இந்த பதிவை பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன். ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் டாக்கீஸ் மாறன்… ஒரு நல்ல மனிதராக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு ஒழுக்கமான மனிதனாக இருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.