போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விருப்பம்!

உக்ரைன்
மீது
ரஷ்யா
6ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தற்போது, சில உதவிகளை மட்டுமே உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இதனால், தனியாக தாங்கள் போராடி வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். உக்ரைனை காக்க அந்நாட்டு மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அந்நாட்டு அரசு, அவ்வாறு வருபவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. மேலும், ராணுவ அனுபவம் கொண்டவர்கள் சிறையில் இருப்பின் அவர்களை விடுதலை செய்யவும் உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் நாட்டுக்காக போராட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால், கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக
ஐ.நா.
, சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா.,
சபை
தெரிவித்துள்ளது.

இன்று முதல் மது விற்பனைக்கு தடை: திடீர் உத்தரவு!

உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேசுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், பேசப்பட்ட சாராம்சங்கள் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா., சபையின் பொதுச் சபை அவசர கூட்டத்தில் ரஷ்ய பிரதிநிதி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை எனவும் அவர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் உக்ரைன் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் ரஷ்ய பிரதிநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.