மாற்றத்திற்கு தயாராக இருங்கள்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சூசக அழைப்பு..!

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்
பாண்டிராஜ்
இயக்கத்தில் ‘
எதற்கும் துணிந்தவன்
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார்
சூர்யா
. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை
சன் பிக்சர்ஸ்
நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக
ப்ரியங்கா அருள்மோகன்
நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, ‘எனது செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும், அது உங்களின் நலனுக்காகத் தான் இருக்கும். அதேபோல் திரைப்படமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து தான் செயல்பட்டு வருகிறோம்.

நான் நல்ல டான்ஸர் இல்லை.. ஆனா.. பாடி ஷேமிங் விமர்சனத்திற்கு அஜித்தின் பதில்..!

அதன்படி, ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் யாரும் பேசத் துணியாத விஷயத்தை சொல்லியிருக்கிறோம். ‘ஜெய்பீம்’ படத்தின்போது சிலருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. அது தற்காலிக பிரச்சினை. அதனை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது ரசிகர்களுக்கும் அப்போது பிரச்சினைகள் உண்டாகின.

ஆனால், அதை அவர்கள் பக்குவமாக கையாண்டார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். இழப்பதற்கு தயாராக இருந்தால்தான் அடைவதற்கு நிறைய இருக்கும். எனவே, மாற்றத்துக்கு தயாராக இருங்கள்’ என தெரிவித்துள்ளார் சூர்யா. ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

“வலிமை” யான வசூல் வேட்டை; படக்குழுவினர் ஹேப்பி !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.