மீண்டும் கர்ப்பமான மனைவி… ஹேப்பி மோடில் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர்
நகுல்
. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

இத்தனை கோடிகளா.. பெத்த தொகைக்கு விலைபோன கமலின் ‘விக்ரம்’ டிஜிட்டில் அன்ட் சேட்டிலைட் ரைட்ஸ்!

தொடர்ந்து கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , செய் ள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வாஸ்கோடகமா என்ற படத்தில் நடித்து வருகிறார் நகுல். நடிகர் நகுல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

நகுலும் அவரது மனைவி ஸ்ருதியும் கடந்த 2020ஆம் ஆண்டு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். வாட்டர் பர்த் முறையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தார்
ஸ்ருதி
. அந்த குழந்தைக்கு அகிரா என பெயரிட்டனர்.

அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதீங்க… ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட வேம்புலி!

இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வரும் ஜூனில் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் நகுலுக்கும் ஸ்ருதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத சொன்னா controversy ஆகுமா தெரியல – கிருத்திகா உதயநிதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.