ரஷ்யாவின் முக்கிய இராணுவ தளபதியை சுட்டுக்கொன்ற உக்ரைன்: புடினின் போர் திட்டத்திற்கு பேரிடி


உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ள தகவல் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ள Major General Andrei Sukhovetsky, கீவ் நகருக்கு வெளியே சுமார் 30 மைல்களுக்கு தொலைவில் அமைந்துள்ள விமானத்தளத்தில் உக்ரைன் சிறப்புப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Major General Andrei Sukhovetsky படுகொலை செய்யப்பட்டது காரணமாகவே, கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்ய துருப்புகளின் நடவடிக்கைகள் பாதியில் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கீவ் நகருக்கு புறப்பட்டு சென்ற 40 மைல்கள் தொலைவு இராணுவ தளவாடங்கள் சேற்றில் சிக்கிக்கொண்டதால் நகர முடியாமல் தாமதமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய இராணுவ தளபதியின் இழப்பு, தளவாடங்கள் சேற்றில் சிக்கி தாமதமாவது என கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது ரஷ்ய துருப்புகள்.
Major General Andrei Sukhovetsky கொல்லப்பட்ட தகவலை ரஷ்ய ஜனாதிபதி புடினும் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் ரஷ்ய போரில் இதுவரை 9,000 வீரர்கள் ரஷ்ய தரப்பில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி உக்ரைன் தரப்பில் 2,000 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து எங்களை மொத்தமாக அழித்து ஒழித்துவிட ரஷ்ய திட்டமிட்டு செயல்படுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனிடையே Major General Andrei Sukhovetsky கொல்லப்பட்ட தகவல் முன்னாள் ரஷ்ய ராணுவத்தினருக்கான அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.