அணு குண்டுகளை வீசி எங்களை அழிக்க "வெஸ்ட்" திட்டம்.. ரஷ்யா பரபரப்பு புகார்

ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன என்று
ரஷ்யா
பகிரங்கமாக புகார் கூறியுள்ளது.

உக்ரைன் மீது படு உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. சிறிய நகரங்களைப் பிடித்த நிலையில் தற்போது கெர்சான் என்ற முக்கியமான பெருநகர் ஒன்றை ரஷ்யா கைப்பற்றி விட்டது. இது உக்ரைனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

கெர்சான் வீழ்ந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்து கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றையும் பிடிக்க ரஷ்யா தீவிரமாக முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் இந்த அதி வேகப் பாய்ச்சலைப் பார்த்து மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் கவலை அடைந்துள்ளன.

இந்த நிலையில் மாஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பொருளாதாரத் தடைகள் சரிவராவிட்டால்
3வது உலகப் போர்
மூளும் என்று கூறியுள்ளார். மூன்றாவது உலகப் போர் என்றால் அது அணு ஆயுதப் போர்தான்.

மேற்கத்திய அரசியல்வாதிகள் தலையில் அணு ஆயுதம்தான் நிரம்பியுள்ளது. ரஷ்ய மக்களிடம் அத்தகைய எண்ணம் இல்லை.

இந்தியா மீது “கேட்சா” சட்டம் பாயப் போகிறதா?.. கலர் கலரா “பிலிம்” காட்டும் அமெரிக்கா!

எங்களுக்கு எதிராக யாரேனும் போர் தொடுத்தால், அதைப் பற்றி அவர்கள் பலமுறை மறு பரிசீலனை செய்து கொள்வது நல்லது. அணு ஆயுதப் போருக்கு நாங்களும் தயார்தான். ஆனால் அவர்கள்தான் இதுதொடர்பாக திட்டமிட்டு வருகிறார்கள் என்றார் லாவரோவ்.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. ரஷ்யா மீது சரமாரியாக பொருளாதாரத் தடைகளை சுமத்திக் கொண்டுள்ளன. ரஷ்யாவை முற்றிலுமாக முடக்க அவை நினைக்கின்றன. ஆனால் ரஷ்யா எதற்கும் அஞ்சாமல், உக்ரைனை தொடர்ந்து தாக்கி வருகிறது. நிலைமை இப்படியே போனால் அல்லது உக்ரைனை முழுமையாக ரஷ்யா கைப்பற்றி விட்டால் அல்லது உக்ரைன் அதிபர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் நிச்சயம் ரஷ்யா மீது படையெடுப்பு நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

அப்படி ஒரு வேளை ரஷ்யாவுக்கு எதிராக போர் மூண்டால் அது நிச்சயம் உலகப் போராக வெடிக்கும். அப்படி வெடித்தால் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்பட அதிக அளவில் வாய்ப்புள்ளதாக அச்சம் கிளம்பியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதப் போருக்கு முயல்வதாக கூறியுள்ளது இன்னும் பீதியைக் கிளப்புவதாக உள்ளது.

இந்தப் பூவை வச்சு என்ன பண்றது??.. மத்திய அரசு மீது பாய்ந்த இந்திய மாணவர்!

உலகில் இதுவரை இரண்டு முறைதான் அணு குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இரண்டு அணுகுண்டையும் வீசிய பாவத்தை சம்பாதித்து வைத்துள்ள நாடு அமெரிக்கா. இரண்டு அணுகுண்டுகளும், 2வது உலகப் போரின்போது ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்டன. இதில் இரண்டு நகரங்களும் அழிந்து போயின. பலலட்சம் பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் அணு ஆயுதங்களை யாரும் பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் அணு ஆயுதங்கள் குறித்த பேச்சு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவிடம் எந்த அளவுக்கு அணு ஆயுதங்கள் இருக்கிறதோ, அதற்கு சற்றும் சளைக்காத அளவுக்கு ரஷ்யாவிடமும் அணு ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இருவரும் நேருக்கு நேர் மோதினால் அது பேயும் பேயும் மோதிய கதையாகவே மாறும் என்பதால் உலகமே அச்சமடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.