எங்களின் ஒரே எண்ணம் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது தான்: வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேட்டி

டெல்லி: தற்போது வரை 18,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தகவல் தகவல் தெரிவித்தார். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 30 விமானங்களில் தற்போது வரை 6,400 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என கூறினர். அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியர்களை அழைத்து வர 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளோம்.உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை முடக்கிமேற்கோண்டு வருகிறோம். வரும் 2-3 நாட்களுக்கு அதிக அளவில் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம், அப்போது ஏராளமான இந்தியர்கள் வீடு திரும்புவார்கள். இந்த போர் சமயத்திலும் உக்ரைன் அரசு இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்கு பாராட்டுக்கள். இந்திய மக்களுக்காக எல்லைகளை திறந்து அண்டை நாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  எங்களின் எச்சரிக்கையை தொடர்ந்து ஏராளமான இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறியுள்ளனர். மேற்கு உக்ரைனில் எல்லையை கடக்க காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற தொடர்ந்து  உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. ஆரம்பத்தில் 20,000 இந்தியர்கள் தூதரகத்தில் பதிவு செய்தனர் ,  கார்கிவ் இன்னும் சில நூறு இந்தியர்கள் இருக்கலாம் என நினைக்கிறோம், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், எங்களின் ஒரே எண்ணம் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது தான் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.