காடுகள் வழியாக ஊருக்குள் புகுந்து.. உள்ளூர்க்காரர்களாக மாறி.. தாக்கும் ரஷ்ய ராணுவம்!

ரஷ்ய ராணுவத்தினர், மாறு வேடத்தில் உக்ரைனுக்குள் புகுந்து, உள்ளூர்க்காரர்கள் போல செயல்பட்டு, உள்ளூர்க்காரர்களையே கொல்வது அதிகரித்து வருகிறது. இதனால் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் வசிக்கும் உக்ரைனியர்கள் பீதியடைந்துள்ளனர்.

ரஷ்யர்களுக்கும் ,உக்ரைனியர்களுக்கும் இடையே வேறுபாடு காண்பது சிரமம். மொழிப் பிரச்சினையும் கிடையாது. இதனால் யார் ரஷ்யர், யார் உக்ரைனியர் என்று பிரித்துப் பார்க்கவே முடியாது. இதைப் பயன்படுத்தி உக்ரைனுக்குள் கால் நடையாக ஊடுறுவுகிறார்கள் ரஷ்யர்கள்.

எல்லைப் பகுதியில் உள்ள காடுகள் வழியாக உக்ரைனுக்குள் நுழையும் ரஷ்யர்கள், உள்ளூக்காரர்கள் போல மாறிக் கொள்கிறார்கள். பின்னர் ஆயுதங்களோடு மக்களோடு மக்களாக கலக்கும் அவர்கள், உள்ளூர்க்காரர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் விசாரணையில் குதித்தபோதுதான் ரஷ்யர்களின் மாறு வேட ஊடுறுவல் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து தற்போது எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளனராம்.

#istandwithputin.. புடினுக்கு பெருகும் ஆதரவு.. அமெரிக்காவை வறுத்தெடுக்கும் இந்தியர்கள்!

சமீபத்தில் கீவ் நகருக்கு அருகே இதுபோல ரஷ்யர்கள் ஊடுறுவிய பகுதியை முற்றுகையிட்ட உக்ரைன் படையினர் அந்தப் பகுதியில் இருந்த பாலத்தை தகர்த்தனர். இதுகுறித்து சிறப்புப் படைப் பிரிவு கமாண்டர் விக்டர் செலோவன் கூறுகையில், உள்ளூர் மக்களிடையே எதிரிகள் ஊடுறுவுவது குறித்து தகவல் கிடைத்துள்ளது. எங்களது ரகசிய ஏஜென்டுகள் மக்களோடு மக்களாக வசிக்கிறார்கள். ஏதாவது வித்தியாசமாக தெரிந்தால் உடனே எங்களுக்குத் தகவல் வந்து விடும் என்றார்.

சில இடங்களில் எதிரிகள் உக்ரைனியர்கள் போல ஊடுறுவியுள்ளனர். உள்ளூர்க்காரர்கள் போலவே நடித்து உள்ளூர்க்காரர்களையே சுட்டுள்ளனர். இர்பின் நகரில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இப்படி எத்தனை பேர் ஊடுறுவியுள்ளனர் என்று தெரியவில்லை. இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த லேவான்சுக் கூறுகையில், இர்பின் ஆற்றைக் கடந்து வயர் பாலம் அமைத்தும், பைப்புகளை வைத்து பாலம் போல செய்தும் இவர்கள் உள்ளே வந்துள்ளது தெரிய வந்தது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய பாலம் இருந்தது. ரஷ்யர்கள் வந்து விடாமல் தடுக்க அந்தப் பாலத்தை உக்ரைன் ராணுவம் ஏற்கனவே தகர்த்து விட்டது.

ரஷ்ய ராணுவத்தின் பாராட்ரூப்பர்கள்தான் ஊடுறுவியிருப்பதாக அறிகிறோம். மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து விடுகிறார்கள். குடியிருப்புகளில் வசிக்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும்போது தாக்குதல் நடத்துகின்றனர் என்றார் அவர்.

ரஷ்ய ராணுவத்தின் உத்திகளில் இது ஒன்று கீவ் தேசிய பாதுகாப்பு உத்திகளுக்கான கழகத்தின் பேராசிரியர் மைகோலா பெலஸ்கோவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
ரஷ்ய ராணுவம்
கீவ் நகரைப் பிடிக்க அனைத்து உபாயங்களையம் பயன்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு செயல்பாடுகளையும் அது செய்து வருகிறது. அதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

பல கிலோமீட்டர் நடந்தோம்.. எல்லையைத் தாண்ட முடியலை.. நரகம்.. மாணவர்கள் கண்ணீர்!

வான்வெளித் தாக்குதல், கமாண்டோக்கள் ஊடுறுவல், ராணுவத் தாக்குதல் என அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். மிக மிக நிதானமாக திட்டமிட்டு ஊடுறுவி வருகின்றனர். பாராட்ரூப்பர்கள் வந்து விட்டாலே அவர்களது திட்டம் தெளிவாக தெரிந்து விட்டது என்றார் அவர்.

ஆனால் ரஷ்ய ராணுவத்தின் ஒவ்வொரு முயற்சியையும் முறியடிக்கும் வகையில் உக்ரைன் ராணுவம் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதிகளில் எல்லாம் ரஷ்ய ராணுவம் ஊடுறுவ வாய்ப்புள்ளதோ அந்த வழிகளையெல்லாம் அது அடைத்து வருகிறது.

இதற்கிடையே, உள்ளூர் மக்களும் சுதாரிக்கத் தொடங்கி விட்டனர். புதியவர்கள் யாரேனும் வந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்களை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். சந்தேகம் வலுக்கும்போது ராணுவத்துக்குத் தகவல் கொடுக்கின்றனர். இப்படித்தான் நான்கு பேரை சமீபத்தில் பொதுமக்கள் சேர்ந்து பிடித்தனர். அவர்களிடம் உக்ரைன் மேப், 2 லேப்டாப்கள் இருந்தன. அதேசமயம், நான்கு பேரிடமும் உக்ரைன் பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் ரஷ்யர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.