"கேரள அரசு அனுமதிக்க வேண்டும்"- முல்லை பெரியாறு தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கடிதம்

“முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கேரளா அனுமதி அளிக்கவேண்டும்” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், முல்லை பெரியாறு பராமரிப்பு பணிகளுக்கு கேரளா ஒத்துழைப்பு தர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தர வேண்டும். மேலும் அணைப் பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளை அமைக்க கேரள வனத்துறை அனுமதிக்க வேண்டும். நீண்ட கால பிரச்னையில் நேரடியாக தலையிட்டு கட்டுமான பொருட்களை வல்லக்கடவு வனச்சாலை வழியாக முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு கொண்டு செல்ல ஒப்புதல் வழங்கிட வேண்டும்” என துரை முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்தி: பிரபல கடையை ‘டேக் ஓவர்’ செய்த ரிலையன்ஸ்: காரணம் என்ன?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.