சட்டுபுட்டுன்னு 'ஏகே 61' பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணுங்க போனி: பயர் மூடில் அஜித் ரசிகர்கள்..!


ஏகே 61
‘ படத்திற்காக அஜித் ஏற்றுள்ள புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் பற்றிய பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகிறது. ‘
வலிமை
‘ படத்தில் ட்ரோல் செய்யப்பட அஜித்தின் லுக் பற்றிய விமர்சனத்தை எல்லாம் அடித்து நொறுக்கும்படி புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்,
எச்.வினோத்
,
போனி கபூர்
கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வலிமை’.

அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ‘வலிமை’ படம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ள இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது.

விஜய் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா: இதென்ன புது கதையா இருக்கு..!

இந்நிலையில் நடிகர்
அஜித் குமார்
தனது குடும்பத்தினருடன், மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களில் கருப்பு வெள்ளை கோர்ட்டுடன் சால்ட் அன்ட் பேப்பர் தாடியுடன் , காதில் கடுக்கனுடன் செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார் அஜித். ‘ஏகே 61’ படத்தில் அஜித்தின் லுக் இதுதான் என கூறப்படுகிறது.

‘ஏகே 61’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைய உள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களால் ஹாப்பி மூடில் இருக்கும் அஜித் ரசிகர்கள், இப்போவே ‘ஏகே 61’ பர்ஸ்ட் லுக் விட்ட வேற லெவலில் இருக்கும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.