ரஷ்யாவுக்கு அடுத்த அடி.. மூடிஸ், ஃபிட்ச்-ன் அறிவிப்பு தான் காரணம்..!

ரேட்டிங் நிறுவனங்களான ஃபிட்ச் மற்றும் மூடிஸ் ஆகியவை, ரஷ்யா மீதான தரத்தினை குறைத்துள்ளன.

இதனால் ரஷ்யாவுக்கு என்ன பாதிப்பு? எதற்காக இந்த ரேட்டிங்குகள் கொடுக்கப்படுகின்றன. உண்மை நிலவரம் தான் வாருங்கள் பார்க்கலாம்.

ஒரு மனிதனுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? அதனை அவரால் திரும்ப செலுத்த முடியுமா? முடியாதா? என்பதைத் தான் கிரெடிட் ஸ்கோர் என்கிறார்கள். அதே போல ஒரு நாட்டின் ரேட்டிங்கினை பொறுத்து அந்த நாட்டுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? அந்த நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என முதலீட்டாளர்கள் தீர்மானிப்பார்கள்.

ரஷ்யாவை காலி செய்யும் பணக்காரர்கள்.. சொந்த நாட்டு மக்களே வெளியேறும் அவலம்.. ஏன்!

கடன் பெறும் திறன் குறையும்

கடன் பெறும் திறன் குறையும்

ஆக ஒரு நாட்டின் ரேட்டிங் குறைந்து விட்டால், அந்த நாட்டிற்கு கிடைக்கும் கடன், முன்பை போல கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். அது மட்டும் அல்ல இன்னும் ஏராளமான நிபந்தனைகளும் இருக்கும். இதனைத் தான் ஃபிட்ச் மற்றும் மூடீஸ் நிறுவனங்களும் செய்கின்றன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஒரு நாடு வீழ்ச்சி கண்டால், அவர்களின் கடன் பெறும் திறன் என்பது குறையும். அதோடு ரஷ்யாவில் முதலீடுகளும் இதனால் குறையும்.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

இது ரஷ்யா உக்ரைனுக்கு இடையேயான பதற்றத்தின் மத்தியில், பல்வேறு நாடுகளும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யா மீதான கடனை திரும்ப செலுத்தும் திறனை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ் & பி-யின் மதிப்பீடு
 

எஸ் & பி-யின் மதிப்பீடு

உக்ரைன் மீதான படையெடுப்பானது ரஷ்யாவின் நிதி சந்தைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்த அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இந்த படையெடுப்பு தான் ரஷ்யாவின் பொருளாதாரம் மீது மிக தாக்கத்தினை ஏற்படுத்துள்ளது. கடந்த வாரத்தில் இப்படி பல சவாலான நிலைக்கு மத்தியில் தான் எஸ் & பி ரஷ்யாவின் மீதான மதிப்பீட்டினை குறைத்துள்ளது.

ஃபிட்ச் & மூடிஸ் ரேட்டிங்

ஃபிட்ச் & மூடிஸ் ரேட்டிங்

ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் BBB என்ற நிலையில் இருந்து B என்று ரஷ்யாவின் மீதான தரத்தினை குறைத்துள்ளது. இது நாட்டின் மதிப்பீடுகளை ரேட்டிங் வாட்ச் நெகட்டிவ் என்ற நிலையில் வைத்தது. மூடிஸ் நிருவனமும் இதனையே சுட்டிக் காட்டியது. இது Baa3 என்ற நிலையில் இருந்து ஆறு புள்ளிகள் குறைத்து B3 என்ற நிலைக்கு குறைத்துள்ளது.

தென் கொரியாவுக்கு பின் ரஷ்யா

தென் கொரியாவுக்கு பின் ரஷ்யா

1997ம் ஆண்டு தென் கொரியா மட்டுமே இந்தளவுக்கு 6 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரஷ்யா மீது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பதிலளிக்கும் வகையில், சர்வதேச தடைகளின் காரணமாக. ரேட்டிங் நிறுவனங்கள் மேக்ரோ ஃபைனான்ஷியல் நிலைத்தன்மை அபாயங்களை அதிகரித்துள்ளன. இந்த தடைகள் ரஷ்யாவின் கடனை திரும்ப செலுத்தும் விருப்பத்தை எடைபோடலாம் என்று ஃபிட்ச் எச்சரித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Moody’s, Fitch downgrade Russia’s sovereign rating

Moody’s, Fitch downgrade Russia’s sovereign rating/ரஷ்யாவுக்கு அடுத்த அடி.. மூடிஸ், ஃபிட்ச்-ன் அறிவிப்பு தான் காரணம்..!

Story first published: Thursday, March 3, 2022, 15:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.