ரஷ்யா மீது நடவடிக்கை எடுங்கள் – டெக் ஜாம்பவான்களிடம் கோரிக்கை வைத்த உக்ரைன்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா முன்னறிவிப்பு இன்றி போர் தொடுத்தது. உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. லட்சக்கணக்கிலான நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

பல நாடுகளிடம் உதவுமாறு கோரிக்கை வைத்தும் உக்ரைனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இச்சூழலில், உக்ரைனுக்கு இண்டர்நெட் சேவை வழங்கப்போவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் சேட்டிலைட் பிராட்பேண்ட் சேவை நிறுவனம் அறிவித்தது.

கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த ரஷ்யா!

டெக் நிறுவனங்களிடம் உக்ரைன் கோரிக்கை

தொடர்ந்து பல வகைகளில் ரஷ்யாவை தளர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் உக்ரைன் அரசு, தற்போது சிலிக்கான் வேலியில் குடிகொண்டிருக்கும் டெக் ஜாம்பவான்களின் ஆதரவை நாடியுள்ளது. அதன்படி,
Oracle
போன்ற பெரும் டெக் நிறுவனங்களிடம், ரஷ்யாவில் உள்ள செயல்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது.

சாப்ட்வேர் நிறுவனமான Oracle Corp, உக்ரைனின் இந்த கோரிக்கைக்கு மூன்று மணி நேரத்திற்குள், ட்விட்டர் மூலம் பதிலளித்தது. அதில், நாங்கள் ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம் என்று தெரிவித்துள்ளது. இதனை உக்ரைன் நாட்டின் துணை தொழில்நுட்பத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் போர்னியாகோவ் உறுதிபடுத்தி உள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர்: மக்கள் பாதுகாப்புக்காக பேஸ்புக், ட்விட்டர் எடுத்த முடிவு!

மேலும், உலகின் மிகப் பிரபலமான
EA Games
கேமிங் நிறுவனமும், தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தங்களின் FIFA Soccer விளையாட்டில் இருந்து ரஷ்ய அணியை நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நடவடிக்கைகளை தொடங்கிய கூகுள்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டும், ரஷ்ய ஊககங்களுக்கு பல வரைமுறைகளை விதித்துள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்தின் யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடும் செய்திகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது.

Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்கிற்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்!

உக்ரைன் தொழில்நுட்ப அமைச்சகம், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்திடம், தங்கள் ஆப் ஸ்டோர் பயன்பாடுகளுக்கு ரஷ்யாவில் தடைவிதிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட பயன்பாடுகளின் பதிவிறக்கங்களை மட்டுமே இந்நிறுவனங்கள் ரஷ்யாவில் முதற்கட்டமாக தடை செய்துள்ளது.

கிரிப்டோகரன்சி வாயிலாக நிதி

முன்னதாக, கிரிப்டோகரன்சி அதாவது மெய்நிகர் பணத்தின் வாயிலாக உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்கலாம் என அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, கிரிப்டோகரன்சி மதிப்பு கணிசமான உயர்வைக் கண்டது.

ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகளை குறிவைக்கும் ரஷ்யா… Ukraine-இன் நிலை என்ன?

அதுமட்டுமில்லாமல், உக்ரைன் நாட்டிற்கு கோடிக் கணக்கில் கிரிப்டோகரன்சிகள் மூலம் நிதி அளிக்கப்படுகிறது. எதிர்பார்ப்பை விட அதிகமான தொகையை உக்ரைனுக்காக பலர் வழங்கி வருவதாகவும் அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்

மேலும், சமூக நலன்களுக்கான ஹேக்கர் அமைப்பு ஒன்றும் உக்ரைன் அரசுக்கு உதவி வருகிறது. இந்த குழுவில் தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமானோர் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்ய கணினிகளை துவம்சம் செய்ய ஹேக்கர்கள் முடிவு; உக்ரைனுக்கு ஆதரவு!

முன்னதாக ரஷ்யாவிக்கு எச்சரிக்கை விடித்திருந்த இக்குழு, உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தியது. போர் தொடர்ந்த நிலையில், ரஷ்ய நாட்டின் பிரத்யேக செய்தித் தளமான RT-இன் இணையதள சர்வரை இக்குழு முடக்கியது நினைவுக்கூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.