Apple Event 2022: iPhone SE 3, M2 சிப்கள் அறிமுகமாவதாகத் தகவல் – நேரலையில் காண வாய்ப்பு!

ஆப்பிள் தயாரிப்புகள் மீது ஆர்வம் கொண்ட விரும்பிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘
apple march event 2022
‘ மார்ச் 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இணைய நேரலை வாயிலாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில், ஆப்பிள் நிறுவனம் தங்களின் புதிய தயாரிப்புகளை வெளியிடுகிறது.

பசிபிக் ஸ்டாண்டேர்டு நேரப்படி, காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக இணையதளத்தில் இதற்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில் நுழைந்து ஆப்பிள் நிகழ்வை நேரலையில் காண முடியும்.

ஆப்பிள் நிகழ்வு 2022 நேரலை நேரம் (apple event 2022 live timing)

டெல்லி, இந்தியா – இரவு 10:30 மணிதுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இரவு 9:00 மணிடல்லாஸ், டெக்சாஸ் – நண்பகல் 12:00 மணிஹொனலுலு, ஹவாய் – காலை 7:00 மணிநியூயார்க், நியூயார்க் – நண்பகல் 1:00 மணிஹாலிஃபாக்ஸ், கனடா – நண்பகல் 2:00 மணிலண்டன், இங்கிலாந்து – மாலை 6:00 மணிபெர்லின், ஜெர்மனி – இரவு 7:00 மணி

முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!

இந்த நிகழ்வைக் காண ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக யூடியூப் பக்கத்திலும் ஒரு நினைவூட்டல் பக்கம் காட்டப்படுகிறது. இதில் இருக்கு ‘Set Reminder’ என்பதை கிளிக் செய்து ஆப்பிள் நிகழ்வுக்கான தேதி மற்றும் நேரத்தை நாள்காட்டியில் சேமித்து வைக்க முடியும்.

எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் தயாரிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை மூன்றாம் தலைமுறை 5G ஸ்மார்ட்போனான
iPhone SE 3
இந்த நிகழ்வில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாம் தலைமுறை iPad Air 5, ஒரு எண்ட்ரி லெவல் மேக்புக் ப்ரோ, ஒரு iMac மற்றும் ஒரு Mac mini ஆகிய ஆப்பிள் தயாரிப்புகளும் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.

இப்படி தான் Apple Foladable iPhone இருக்குமாம்! கூடவே ஆப்பிள் உருவாக்கும் realityOS

மேலும், கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, ஆப்பிள் புதிய AR கிளாஸை அறிமுகப்படுத்தி பயனர்களை ஆச்சரியப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஆப்பிள் தயாரிப்புகளில் புதுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எஸ்இ 3 சிறப்பம்சங்கள் (iPhone SE 3 Specifications)

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் நல்ல விற்பனையான ஐபோன் எக்ஸ் ஆர் டிசைனை, புதிய ஐபோன் எஸ்இ 3 கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்ச் திரை இதில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், குறைந்தளவு பெசல்களே இந்த ஸ்மார்ட்போன் திரையில் இருக்கும் என்பதையும் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.

வெளியாக தயாராகும் Apple மேக் கணினிகள்! உள்ளே என்ன சிப் இருக்கு தெரியுமா?

ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேமும், 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி இருக்கும் என்று தெரிகிறது. ஏ15 பயோனிக் சிப் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைமுறைக்கான 5ஜி ஆதரவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 25,000 ரூபாய் ஐபோன் எஸ்இ 3 ஸ்மார்ட்போனின் தொடக்க விலையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், கூடுதலாக ஐபோன் எஸ்இ ப்ளஸ் மாடலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More:
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘Nothing’ டீஸர்! iPhone-ஐ மிஞ்சும் கேமரா… Oppo Find X5 Pro 5G வெளியாக தயாராகும் Apple மேக் கணினிகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.