கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல! திமுக மீது சாடிய சிபிஎம் பாலகிருஷ்ணன்…

சென்னை: பதவி வெறியால் திமுகவினர், கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல என திமுக மீது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர்  கே பாலகிருஷ்ணன் கொந்தளித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தலைமை பதவிக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுக வினர் போட்டியிட்டு, அவர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுக தலைமை மீறி, மாவட்ட திமுகவினர்  தட்டிப் பறித்துள்ளனர்.  இது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், கூட்டணி தர்மத்தை மீறி வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும் என்று திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பதவி வெறி காரணமாக,  கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல,  கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை அதை  நிறைவேற்றும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் இடங்கள் அனைத்திலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக, எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டுள்ள போக்கு அனுமதிக்க முடியாததாகும். பதவி வெறியில் சிலர் ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதிக்கும் விதமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இது ஆரோக்கியமான அரசியலின் வெளிப்பாடு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், விசிக கோபம்: பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளின் தலைவர் பதவிகளை தட்டிப்பறித்த திமுக….

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.