தேவகோட்டை நகராட்சியில் அமமுக ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் வெற்றி.! <!– தேவகோட்டை நகராட்சியில் அமமுக ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் வெ… –>

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், அமமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 10 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும் வென்றன. திமுக கூட்டணி 12 இடங்களில் வென்றது.

இந்த நிலையில், தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி உடல்நிலை காரணமாக திடீரென வராததால், திமுக கூட்டணி கவுன்சிலர்கள் சென்றுவிட்டனர்.

பிறகு, மாற்று தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இதன் காரணமாக, அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம், அமமுக ஆதரவுடன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.