அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போலந்து, ருமேனியா பயணம்

வாஷிங்டன்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாளை எட்டியுள்ளது. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகளை அணிதிரட்டி வருகிறது அமெரிக்கா.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் போலந்து, ருமேனியா ஆகிய 2 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை அவர் இரு நாடுகளிலும் பயணம் மேற்கொள்வார்.
போலந்து, ருமேனியா நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது ரஷியாவின் நியாயமற்ற உக்ரைன் படையெடுப்புக்கு பதிலளிக்க நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர் முன்னெடுப்பார் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.