கண்டி-தெமோதர சுற்றுலா ரெயில் சேவை இன்று ஆரம்பம்

கண்டி – தெமோதர சுற்றுலா ரெயில் சேவை இன்று (05) முதல் ஆரம்பமாகும்.

கண்டியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில் பிற்பகல் 2.45ற்கு தெமோதரரையை சென்றடையும். பேராதனைச் சந்தி, கெலி-ஓயா, நாவலப்பிட்டி, ஹட்டன், கிரேப் வெஸ்டன், நானு-ஓயா, பட்டிபொல, ஒஹிய, இந்தல்கஸ்ஹின்ன, ஹப்புத்தளை, எல்ல மற்றும் தெமோதர ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிறுத்தப்படும்.

அதேபோல் கொஸ்டல் நீர்வீழ்ச்சி, சிவனொளிபாதமலை, சென் கிளயார் நீர்விழ்ச்சி, எல்ஜின் நீர்வீழ்ச்சி, ஒன்பது வளைவுப்பாலம் ஆகிய சுற்றுலா இடங்களிலும்  இந்த ரெயில் நிறுத்தப்படும். இந்த இடங்களில் இரண்டு முதல் 15 நிமிடங்கள் ரெயில் நிறுத்தப்படும். அதன் பின்னர் இந்த ரெயில் மாலை 3.40ற்கு தெமோதரப் பிரதேசத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.35ற்கு கண்டியை சென்றடையும்.

இந்த பயணத்தின்போது சுற்றுலா .இடங்களில்  ரெயில் நிறுத்தப்பட மாட்டாது. அனைத்து ஆசனங்களும் முன்கூட்டியே ஒதுக்கப்பட வேண்டும். ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரை கட்டணம் அறவிடப்படும். உலகின் மிக ரம்மியமான பத்து பயணப் பாதைகளில் ஒன்றாக இந்த அடைவிடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ரெயில் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கூடுதலான வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.