கர்நாடகா பட்ஜெட் தலைவர்கள் கருத்து| Dinamalar

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 250 ரூபாய் டீசல் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மேகதாது, பத்ரா மேல் கால்வாய், துங்கபத்ராவை சமப்படுத்தும் அணை கட்ட நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி.

எடியூரப்பா, முன்னாள் முதல்வர், பா.ஜ.,முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்துள்ளது மக்கள் நலன் சார்ந்த மற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட். நான் முதல்வராக இருந்தபோது ‘யஷஸ்வினி ஆரோக்கியா’ திட்டம் கொண்டு வந்திருந்தேன். சில ஆண்டுக்கு முன் அது நிறுத்தப்பட்டது. தற்போது அதை முதல்வர் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி.எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் முதல்வர்ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளாதார வளர்ச்சியை கொடுக்கக்கூடிய பட்ஜெட். கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பை வழங்கும் பால் பண்ணை, மீன்வளம் போன்ற தொழில்களுக்கு பொருளாதார உதவி வழங்கி உள்ளது ஊக்கம் அளிக்கும். சாதாரண மக்களின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கோவிந்த கார்ஜோள், அமைச்சர், நீர்ப்பாசன துறைகொரோனாவுக்கு பின் சீரடைந்து வரும் கர்நாடகாவின் முழுமையான வளர்ச்சிக்கு ஏற்ற பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்டுக்கு வாழ்த்துக்கள்.நளின்குமார் கட்டீல், மாநில தலைவர், பா.ஜ.,பசவராஜ் பொம்மை தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர் தன் பேச்சின் மூலம் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால், பட்ஜெட்டை பார்த்த பின் அது எல்லாமே பொய்த்து விட்டது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கும், வளர்ச்சிக்கு விரோதமான பட்ஜெட்.சித்தராமையா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்மேகதாது அணை திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது வரவேற்கக் கூடியது. ஆனால் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பெங்களூரு நகருக்கு அறிவிக்கப்பட்ட 7,795 கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை. எனவே, மேகதாது அணை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்க கூடாது. செயலுக்கு வர வேண்டும்.சிவகுமார், மாநில தலைவர், காங்கிரஸ்முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வளர்ச்சிக்கு எதிரானது. தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.ஹரிபிரசாத்,மேலவை எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்உப்பு, புளி, காரம் இல்லாத பட்ஜெட் இது. யாருடைய நெருக்கடியின் பேரிலோ முதல்வர் பசவராஜ் பொம்மை வாசித்த பட்ஜெட். அலங்கார வார்த்தைகள் கொண்டதாகும். வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு அறிவிப்பு இருக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது பொய்த்து போய் விட்டது.குமாரசாமி, முன்னாள் முதல்வர், ம.ஜ.த.,

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.