சசிகலாவுடன் சந்திப்பு எதிரொலி: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நீக்கம்

வி.கே.சசிகலாவை சந்தித்துப் பேசிய ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
வி.கே.சசிகலாவை திருச்செந்தூரில் நேற்று மாலை ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் அதிமுகவிலிருந்துநீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுகிறார்.
image
தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓ.ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். சசிகலாவை சந்திக்க ஓ.ராஜாவுடன் சென்ற தேனி மாவட்ட நிர்வாகிகள் மேலும் 3 பேரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்புஜி தேனி கூடலூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபதி ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.